திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முககொல்லைப் பகுதியில் வசித்துவருபவர் தாமரை. இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், அவர் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே சென்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்களைத் திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றபோது அப்பகுதி பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.
பின்னர், சம்பவம் குறித்து நகர காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்களிடம் அவர்களைப் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.