திருப்பத்தூர் மாவட்டம்அனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 116 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் மேற்கூரையில் பாம்பு சென்றதாக மாணவர்கள் நேற்று ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் வனத்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், யாரும் வரவில்லை. இதனிடையே தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர், மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.