தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் திருப்பத்தூர் முதலிடம்!

தமிழ்நாட்டிலேயே இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை வகிக்கிறது.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை வகிக்கிறது -  மாவட்ட கண்காணிப்பாளர் பெருமிதம்
இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை வகிக்கிறது - மாவட்ட கண்காணிப்பாளர் பெருமிதம்

By

Published : May 8, 2022, 9:15 AM IST

திருப்பத்தூர்: புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று (மே7) திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளரும் முதன்மைச் செயலருமான தென்காசி ஜவகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளரும் முதன்மை செயலருமான ஜவகர், “திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருகிறது. ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து வேலைகளும் முடிந்து திறக்க வழிவகை செய்யப்படும்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் திருப்பத்தூர் முதலிடம்

திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை முதலமைச்சர் மற்றும் முகவரி திட்டத்தின் கீழ் 2218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தற்போதுவரை 1,741 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு 1 கோடியே 48 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கு 70 மருத்துவ மதிப்பீட்டு முகாம் அமைக்கப்பட்டு 3,723 தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் முதன்மை மாவட்டமாக உள்ளது.

இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் சுமார் 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயணித்து வருகின்றனர். மேலும் கரோனா பாதிக்கப்பட்டு இறந்த 1,004 குடும்பத்திற்கு 5 கோடிக்கு மேல் அரசு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜாம்ஷெட்பூர் டாடா ஆலையில் பயங்கர தீ!

ABOUT THE AUTHOR

...view details