தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று வேட்டைக்காரர்கள் கைது - திருப்பத்தூர் செய்திகள்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே காப்புக்காட்டு பகுதியில் வேட்டையாடுவதற்காக சுற்றித் திரிந்த மூன்று பேரை ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் கைது செய்தனர்.

வேட்டைக்காரர்கள் கைது
வேட்டைக்காரர்கள் கைது

By

Published : May 29, 2020, 3:59 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் உள்ள காப்பு காட்டில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்தி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் மூன்று பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.

அதன்பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த முத்து (55), மேல்அத்திப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி (55), ஜெயராமன் (35) என தெரியவந்தது. இவர்கள் மூவரும் வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டில் மறைந்து வாழ்ந்துள்ளனர்.

மேலும் அவர்கள் வேட்டையாடுவதற்காக காட்டுப் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டதால் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, டார்ச் லைட் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details