உடுமலையிலிருந்து கணபதி பாளையம் நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது, கணபதிபாளையம் பிரிவு ரோடு அருகே எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மோதியுள்ளனர்.
உடுமலைப்பேட்டை விபத்தில் மூன்று பேர் பலி! - திருப்பூர் சாலை விபத்து
திருப்பூர் : கணபதிபாளையம் அருகே டாடா ஏசி வாகனம் மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற மூவர் உயிரிழந்தனர்.
திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே விபத்தில் மூன்று பேர் மரணம்
இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த பிச்சமுத்து, ருத்ரமூர்த்தி, சபரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டு பாத்திரங்களை திருடி வந்த நபர்கள் - மதுபோதையில் உறங்கியபோது பிடித்த மக்கள்