திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின் பேசிய அவர், திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த மாதம் நடைபெற்ற முகாமில் 350க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் மூலம் பெறப்படும் திட்டங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கு தடையின்றி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.