கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கோவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்கள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் என்ற நிலைத் தகவல்களாக வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, இத்தனை பேர் அனுமதி, இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.