தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்த திருப்பத்தூர் ஆட்சியர்! - கரோனா சிகிச்சை மையம்

திருப்பத்தூர்: திம்மணாமுத்தூர் அருகே தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த திருப்பத்தூர் ஆட்சியர்!
கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த திருப்பத்தூர் ஆட்சியர்!

By

Published : May 13, 2021, 11:08 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், திம்மணாமுத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தையும் மாவட்ட ஆட்சியர் சிவனருள், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் நல்ல தம்பி, சுமார் ஆயிரம் நபர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். அதேபோல், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

இதேபோல், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் விடுதியில் சுமார் 50 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சி தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டத் தலைவர் உமாபதி, வெங்கடேசன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details