தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2021, 7:34 PM IST

ETV Bharat / state

தரமற்ற முறையில் கான்கிரீட் அமைப்பு: ஆக்சிஜன் நிரப்ப முடியாமல் ஊழியர்கள் தவிப்பு

திருப்பத்தூர்: அரசு மருத்துவமனையில் தரமற்ற முறையில் கான்கிரீட் அமைத்ததால் ஆக்சிஜன் நிரப்ப முடியாமல் ஊழியர்கள் தவிப்புக்குள்ளானார்.

concrite damage
தரமற்ற முறையில் கான்கிரீட் அமைப்பு: ஆக்ஸிஜன் நிரப்ப முடியாமல் ஊழியர்கள் தவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம், அதிமுக நிர்வாகி என்பதால் பல டெண்டர்களை எடுத்து பணி செய்துவருகிறார். இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பி கொள்கலன் அமைக்கவும் டெண்டர் எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே.4) ஆக்சிஜன் நிரப்ப கன்டெய்னர் லாரி மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது.

தரமற்ற முறையில் கான்கிரீட் அமைப்பு: ஆக்ஸிஜன் நிரப்ப முடியாமல் ஊழியர்கள் தவிப்பு

அப்போது கால்வாய்க்கு மேலே சிறிய அளவிலான கான்கிரீட் மட்டுமே ஆறுமுகம் போட்டுள்ளார். இதனால் ஆக்சிஜன் லாரி கான்கிரீட் மீது ஏறியபோது திடீரென உடைந்துள்ளது. இருப்பினும் சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் முன்னோக்கி சென்று நிறுத்தினார்.

தரமற்ற முறையில் கான்கிரீட் அமைப்பு: ஆக்ஸிஜன் நிரப்ப முடியாமல் ஊழியர்கள் தவிப்பு

பின்னர் மருத்துவமனையில் சுற்றுச்சுவரில் துளையிட்டு ஆக்சிஜன் கொள்கலன் நிரப்பியதில், காற்றை நிரப்ப வேண்டியதாயிற்று. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் ஏற்பட்டது.

தரமற்ற முறையில் கான்கிரீட் அமைப்பு: ஆக்ஸிஜன் நிரப்ப முடியாமல் ஊழியர்கள் தவிப்பு

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், “கீழே கால்வாய் இருப்பதாகவும், அதன் மேலே சிறிய அளவில் கான்கிரீட் கொட்டியுள்ளதால் லாரி ஏறியவுடன் உடைந்துவிட்டது. திரும்பவும் இதுபோல் சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும். கான்கிரீட் முழுவதுமாக உடைத்து இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்” என்றனர்.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த டிராபிக் ராமசாமி!

ABOUT THE AUTHOR

...view details