திருப்பத்தூர்:ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வடமால்பேட்டை எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனை அம்மாவட்ட போலீஸ் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு - College students attack at toll booth
வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 39 பேர் கைது
இந்த தாக்குதலைக கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று (அக். 25) ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைத்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு: 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்