திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த காவியா விக்டர் உள்ளார். இந்நிலையில் நகர மன்ற தலைவர் காவியாவின் கணவர் விக்டருக்கு இரு நாட்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அதனை முன்னிட்டு ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில், நகராட்சி கூட்ட அரங்கில் அவருக்கு கேக் வெட்டி கறி விருந்து வழங்கி நகராட்சி ஆணையாளர் பழனி சிறப்பான ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
நகரமன்ற தலைவரின் கணவர் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய நகராட்சி ஆணையர் ஜோலார்பேட்டை நகர பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமலும், பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் நகர மன்ற தலைவரின் கணவருக்கு பிறந்தநாள் விழா நடத்தியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை செய்து அதிகாரிகள் ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்க வைக்கின்றனர்.
இதையும் படிங்க:மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’க்கு சங்கிலியுடன் கூடிய புதிய பெயர் பலகை!!