திருப்பத்தூர் குமரசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கட ராஜன் (65) ஜின்னா ரோடு பகுதியில் துணிக்கடை நடத்திவருகிறார். தற்போது தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு கடையின் உள்ளே விற்ற துணிக்கடைக்குச் சீல்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டு உள்ளே விற்பனை செய்த துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் துணி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் திருப்பத்தூரில் அமைந்துள்ள மகாலட்சுமி துணி கடை உரிமையாளர் வெங்கடராஜன் காலை முதலே கடையை திறந்து விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் தாசில்தார் தலைமையில் திருப்பத்தூர் வருவாய் அலுவலர் தணிகாசலம், ஆண்டியப்பனூர் வருவாய் அலுவலர் குமரன், அலுவலர்கள் சென்று பார்த்தனர். அப்போது பார்த்தனர் வருவதை அறிந்த உரிமையாளர் அவசரம் அவசரமாக வாடிக்கையாளர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பார்த்தனர் கடையின் உரிமையாளரை தொலைபேசியில் அழைத்து கடைக்கு வருமாறு கூறியபின் துணிக்கடையில் திறந்து பார்க்கும் பொழுது சுமார் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கடையின் உள்ளே இருந்து வெளியே வந்தனர்.
இச்சம்பவம் பார்த்தனர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மகாலட்சுமி துணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் அருகில் அமைந்துள்ள சந்திரசாரீஸ் என்ற துணி கடைக்கும் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.