தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Audio: அரசு பள்ளி டீச்சர்களை சாதி பெயரால் ஆபாசமாக பேசிய ஆசிரியர்! - tirupattur district news

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியைகளை சாதி பெயரால் ஆபாசமாக பேசிய தற்காலிக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியைகளை சாதி பெயரால் ஆபாசமாக பேசிய தற்காலிக ஆசிரியர்!
அரசு பள்ளி ஆசிரியைகளை சாதி பெயரால் ஆபாசமாக பேசிய தற்காலிக ஆசிரியர்!

By

Published : Dec 6, 2022, 5:39 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண், பெண் இருபாலர் என 190 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அதேநேரம் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தற்காலிக ஆசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

சக ஆசிரியைகளை அவர்களது சாதி பெயர் சொல்லி தற்காலிக ஆசிரியர் பாஸ்கர் ஆபாசமாக பேசிய ஆடியோ

இந்த நிலையில் பாஸ்கர், பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியைகளை அவர்களது சாதி பெயர் சொல்லி ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து பாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளையாம்பட்டு கிராம மக்கள், வாணியாம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details