திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர், விஜயன். இந்தப் பள்ளியில் தற்பொழுது 9 மாணவ, மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம், ஆசிரியர் விஜயன் கல்வி கற்றுக்கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை உணர்ந்து கொண்ட சிறுமி, வீட்டிற்குச் சென்று தன்னுடைய பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குச் சென்று ஆசிரியர் விஜயனை சரமாரியாகத் தாக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.