இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் கருப்பு சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் அறவழியில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு பாஜக மற்றும் சங் பரிவார் கூலிப்படைதான் காரணம். டெல்லியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டருக்கு பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது டெல்லி போலீசார் அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய வன்முறை நிகழ்ந்திருக்காது.
தமிழ்நாட்டில் கலவரம் வந்தால் ஹெச். ராஜாதான் காரணம்: எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி - ஹெச்.ராஜா
திருப்பூர்: தமிழ்நாட்டில் கலவரம் வந்தால் பாஜகவின் ஹெச். ராஜாவும், கல்யாணராமனும்தான் காரணம் என எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
எனவே டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
பாஜகவின் ஹெச். ராஜா மற்றும் கல்யாணராமன் ஆகியோர் ட்விட்டர் மூலம் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்துவருகின்றனர். தமிழ்நாட்டில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் ராஜா மற்றும் கல்யாணராமன்தான். அவர்கள் மீது தமிழ்நாடு அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.