திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சி சட்ட வாரம் முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் ராஜேஸ்வரி பாரதியார் விருதுபெற்ற தமிழ்த்துறை தலைவர் சிவராஜ்ஆகியோர் தலைமையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் மாணவர்களிடையே ஏற்றமா,?ஏமாற்றமா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய கல்லூரி,இமயம் கல்லூரி கலந்துகொண்டு ஏற்றமே ஏமாற்றமே குறித்து விவாதங்களை முன்வைத்து பேசினர். தமிழ்த்துறைத் தலைவரும் பட்டிமன்றம் நடுவருமான சிவராஜ் பேசுகையில், “தமிழ் மொழியில் அம்மா என்ற வார்த்தை சொல்தும் எழுதுவதும் ஒருமையும் பன்மையும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும்போது மாற்றம் இருக்கிறது. ஆகையால்தான் தமிழ் மொழி முதன்மை மொழியாக விளங்குகிறது.
தமிழ் வளர்ச்சித் துறையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் ஆட்சி புரிந்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களிடத்தில் தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் வளர்ச்சி இளைஞரை பட்டறை ஆரம்பிக்கப்பட்டு மாவட்டந்தோறும் இதுபோன்ற பட்டிமன்றங்கள் மூலம் மாணவர்களுக்கு தமிழ் மொழி குறித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். தமிழுக்காக மாணவர்கள் சான்றோர்கள் முதியவர்கள் யாரெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். அவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் கோரிக்கை வைக்கப்பட்டு அதனை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் செய்துவருகிறார்.
தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் பட்டியலில் 5லிருந்து 75 விருதுகளை வழங்கி தற்போது ஆட்சி செய்துவரும் அதிமுக அரசு தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு ஊக்கத்தினை செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் மாணவர்களிடத்தில் தமிழ் வளர்ச்சி ஏற்றம்தான் பெற்றிருக்கிறது என பட்டிமன்றம் நடுவர் மாணவர்களுக்கு விளக்கினார்.