தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டுநரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் - ஆயுதப்படைக்கு மாற்றம் - வாகன ஓட்டுநரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

ஆலங்காயம் அருகே இரு சக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றவரை கன்னத்தில் அறைந்த காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வாகன ஓட்டியை தாக்கிய காவலர்
வாகன ஓட்டியை தாக்கிய காவலர்

By

Published : Nov 11, 2021, 10:44 AM IST

திருப்பத்தூர்:ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே நேற்று (நவ.09) ஆலங்காயம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் என்பவரை மறித்தார்.

ஆனால், அவர் நிற்காமல் சென்றார். இதனால், கடுப்பான உதவி ஆய்வாளர் உடனடியாக அந்த வாகனத்தை துரத்திச் சென்று, வாகன ஓட்டுநரை பிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் அவரை காவல் உதவி ஆய்வாளர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார். இதில் ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநரும் காவலரை திருப்பி தாக்கினார்.

பணியிடை மாற்றம்

இந்நிலையில் மணிகண்டனை கைது செய்த ஆலங்காயம் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான காணொலி இணையத்தில் பரவியது.

வாகன ஓட்டியை தாக்கிய காவலர்

இதனைக் கண்ட திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், ஆலங்காயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமாபதியை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உருண்டு புரண்டு பைக் ரைடருடன் காவலர் சண்டை செய்யும் காட்சி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details