தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமர் கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற திருப்பத்தூரில் சிறப்புப் பூஜை - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்: அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற வெள்ளக்குட்டை கோதண்டராமர் ஆலையத்தில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

ராமர் கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற சிறப்பு பூஜை
ராமர் கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற சிறப்பு பூஜை

By

Published : Aug 5, 2020, 10:10 PM IST

அயோத்தியில் இன்று நடைபெற்றுவரும் பூமி பூஜை, ராமர் கோயில் கட்டுமானப் பணி ஆகியவை எந்தவித தடைகளுமின்றி சிறப்பான முறையில் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றும், கரோனாவின் தாக்கம் நாட்டை விட்டு அகல வேண்டும் என்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த வெள்ளக்குட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

பாஜக இளைஞரணித் தலைவர் வினோத், பாஜக ஒன்றியச் செயலாளர் பூபதி ஆகியோர் இச்சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details