திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி (57) கணவனை இழந்த இவர் தனது மகளான உஷா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் உஷா தனது கணவருடன் தகராறு ஏற்பட்டு தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று(டிச.7) இரவு பிரேம்குமார் மாமியார் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த பிரேம்குமார் உஷாவை தாக்க முயன்ற போது ஹேமாவதி பிரேம்குமாரை தடுத்துள்ளார். அப்பொழுது பிரேம்குமார் ஹேமாவதியை கீழே தள்ளியபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஹேமாவதி மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஹேமாவதியை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.