தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட திமுக நிர்வாகி கைது! - Tirupattur district news

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே 17 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Social media mainar girl photos issued one arrest
Social media mainar girl photos issued one arrest

By

Published : Sep 10, 2020, 3:06 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அஜித் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் கடந்த மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு பிணையில் வெளியே வந்த இவர் மீண்டும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் 17 வயது மகளுக்கு செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பியும், அச்சிறுமியின் புகைப்படத்தை தன்னோடு இணைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை தட்டி கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு அஜீத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் திமுக தகவல் தொழிநுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் அஜீத் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அஜீத் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் புகைப்படங்களில் அஜித்துடன் உள்ள ராமன், சுதன் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு கொலை வழக்கில் கூலிப்படையாக செயல்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details