திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிறுவன் லிங்கேஸ்வரன் (7) இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று (ஆகஸ்ட்.20) இரவு சேர்த்த போது, அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு: அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய ஆறு பேர் கைது! - அரசு மருத்துவமனை
திருப்பத்தூர்: சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, ஆம்பூரில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்து மருத்துவமனை ஊழியரை தாக்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனால் சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்து அங்குப் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர் ஜெய்சங்கர் என்பவரைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மருத்துவமனை ஊழியர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனை சார்பில், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த கருணா வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உமராபாத் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், பெரிய கொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த யஸ்வந்த்ராஜ், ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்த மாறன் உள்ளிட்ட ஆறு பேரை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரைத் தேடி வருகின்றனர்.