தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75 சவரன் நகைகள் கொள்ளை.. 6 மணிநேரத்தில் 7 பேரை கைதுசெய்த போலீஸார் - crime news

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தொடர் இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது அவர்களிடம் இருந்து 75 சவரன் தங்க நகை, 9 கிலோ வெள்ளி, 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

By

Published : Nov 10, 2022, 5:27 PM IST

Updated : Nov 10, 2022, 6:13 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகியப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களைப்பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அடகு கடையில் 75 சவரன் தங்க நகைகள் மற்றும் 9 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை 24 மணி நேரத்தில் பிடித்தனர்.

மேலும் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் வாகனத் தணிக்கையின்போது பிடித்தனர்.

இச்சம்பவங்களில் ஈடுபட்ட பெரியாங்குப்பம் பகுதியைச்சேர்ந்த திவாகர், சதீஷ், கம்பிக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த கருணா, பெத்தலேகம் பகுதியைச் சேர்ந்த மெல்வின், சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மற்றும் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அப்சல் அகமது, மற்றும் கோவிந்தன் ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் குற்றவாளிகளை விரைவாகப் பிடித்த தனிப்படை காவலர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் பாராட்டுகள் தெரிவித்து பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் கூறியதாவது, 'திருப்பத்தூர் மாவட்டம், முழுவதும் தொடர் இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை விரைவாகப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூன்று தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் மூன்று தனிப்படை காவலர்கள் மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளைத்தேடும் பணியில் ஈடுபட்டு தங்க நகையை கொள்ளையடித்த நபர்களை 6 மணி நேரத்திலும்; இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை 24 மணி நேரத்திலும் பிடித்தனர்.

75 சவரன் நகைகள் கொள்ளை.. 6 மணிநேரத்தில் 7 பேரை கைதுசெய்த போலீஸார்

அவர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பான குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து விரைவாக பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொடர் கொள்ளை... 5 இளைஞர்கள் கைது...

Last Updated : Nov 10, 2022, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details