தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு - கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கலந்துகொள்ள திருப்பத்தூர் மாவட்ட அணிக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு ஆம்பூரில் நடந்தது.

மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி வீரர்கள் தேர்வு
மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி வீரர்கள் தேர்வு

By

Published : Jul 23, 2022, 6:32 PM IST

திருப்பத்தூர்:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக மாவட்டங்கள்தோறும் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடந்துவருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் அணிக்காண வீரர்களை மாவட்ட கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்கம் ஆம்பூரில் தேர்வு செய்தது.

இதில் 14,16, 19 வயதுகுட்பட்ட 300க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வினை ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, தனியார் பள்ளி தாளாளர் ஜான் தொடங்கி வைத்தனர். ஆம்பூரை தொடர்ந்து நாளை திருப்பத்தூர் நகரத்திலும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!!

ABOUT THE AUTHOR

...view details