தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் உரிய அனுதியின்றி இயங்கிவந்த குடிநீர் ஆலைகளுக்குச் சீல்வைப்பு! - அனுதியின்றி இயங்கி வந்த குடிநீர் ஆலைகள்

திருப்பத்தூர்: ஆம்பூரில் உரிய அனுமதியின்றி இயங்கிவந்த மூன்று குடிநீர் ஆலைகளுக்கு வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் சீல்வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

seal
seal

By

Published : Nov 7, 2020, 2:38 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவிற்குள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி குடிநீர் ஆலைகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவனருளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபனுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் சதீஷ் என்பவருக்குச் சொந்தமான குடிநீர் ஆலை, அயித்தம்பட்டு பகுதியில் நவ்மன் என்பவருக்குச் சொந்தமான குடிநீர் ஆலை, ராளகொத்தூர் பகுதியில் நேதாஜி என்பவருக்குச் சொந்தமான குடிநீர் ஆலை ஆகியவை உரிய அனுமதியின்றி இயங்கிவந்ததாகக் கூறி ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மூன்று குடிநீர் ஆலைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிங்க:கோவை மாநகராட்சி திட்டப் பணியில் பல கோடி ரூபாய் ஊழல் - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details