தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்றில் மூழ்கி பள்ளி சிறுவன் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை! - காவல்துறை விசாரணை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி 14 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Schoolboy drowns in river - Police investigation!
Schoolboy drowns in river - Police investigation!

By

Published : Sep 23, 2020, 10:41 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சலாமாபாத் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மகன் முகமத் சாத் (14) அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று அருகே உள்ள ராமய்யன்தோப்பு பாலாற்றின் கிளை ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இரவு நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாலாறு பகுதி வழியாக சென்ற சிலர், ஆற்றில் சிறுவனின் சடலம் மிதப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் அங்கு சென்று பார்த்தபோது முகமது ஷாத் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறை வளாகம் அருகே தப்பி தலைமறைவான கைதி: மடக்கிப்பிடித்த தனிப்படை!

ABOUT THE AUTHOR

...view details