திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீரராகவபுரம் பகுதியில் பாலாற்றில் தொடர்ந்து கள்ளத்தனமாக மணல் கடத்திவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்ரவர்த்திக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அவர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் சோமலாபுரம், வீரராகவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்திவந்த திமுக பிரமுகரின் மகன் கைது
ஆம்பூர் அருகே பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்திவந்த திமுக பிரமுகரின் மகன் கைதுசெய்யப்பட்டு, 80 மணல் மூட்டைகளுடன் மினி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது பாலாற்று கரையோரம் மினி வேனில் மணல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டிருந்த வேனை 80 மணல் மூட்டைகளுடன் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டுவந்த அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் முத்து என்பவரின் மகன் விமல் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாற்றில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருபவர்களை புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.