திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய வீதியான ஈத்கா சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஐடிசி சிகரெட் கம்பெனியின் மொத்த விற்பனையாளர் குடோன் உள்ளது.
உயர்ரக சிகரெட்டுகள் திருட்டு:
இங்கு, வழக்கம்போல் நேற்றிரவு (டிச.21) 8:30 மணியளவில் மேலாளர் முரளி என்பவர் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, இன்று (டிச.22) காலை வழக்கம்போல் கடைக்கு வந்த முரளி கடையை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, கடையின் பின் பக்கத்திலுள்ள ஷட்டர் உடைக்கப்பட்டு, 26 பண்டல் கொண்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக சிகரெட்டுகள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிசிடிவி மூலம் விசாரணை:
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர், திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
சிகரெட் பண்டல்களை திருடும் சிசிடிவி காட்சி அப்போது, இரவு 1:40 மணிக்கு அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆம்னி வேனில் வந்துள்ளனர். பின்னர், அதிலிருந்த இரண்டு பேர் மட்டும் குடோனுக்குள் புகுந்து சிகரெட்டுகளை திருடியது தெரியவந்தது.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர் குடியிருப்புகளை குறிவைத்து விலை உயர்ந்த சைக்கிள்கள் திருட்டு - இருவர் கைது