தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயலால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு! - Mandous

திருப்பத்தூரில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் மழையால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு!
மாண்டஸ் புயலால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு!

By

Published : Dec 10, 2022, 4:59 PM IST

திருப்பத்தூர்: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், இன்று (டிச.10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இருப்பினும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சி, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி மற்றும் ஆலங்காயம் ஆகியப் பகுதிகளில் தற்போது மழை அதிகளவில் பெய்து வருகிறது.

இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டிலேயே உள்ளனர். இதனால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை காவல் துறையின் CCTV-களை சேதப்படுத்திய மாண்டஸ் புயல்!

ABOUT THE AUTHOR

...view details