இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த திடீர் உத்தரவால் அடித்தட்டு மக்கள், சிறு, குறு தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள், தன்னார்வு அமைப்புகள் நிவாரண பொருள்களை வழங்கிவருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வாணியம்பாடியில் திருநங்கைகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிய வருவாய் கோட்டாட்சியர்! இவர்களது நிலைமையை அறிந்த வருவாய் துறையினர், ஜெயின் சங்கத்தினர் இணைந்து சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு முகக்கவசம், கையுறை, மளிகைப் பொருள்கள் தொகுப்பினை வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி வீடு வீடாகச் சென்று வழங்கினார்.
இதையும் படிங்க:புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கரோனா நோயாளிகள்!