தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் கல்லாறு புனரமைக்கும் பணி தொடக்கம்! - Collector Sivanarul

திருப்பத்தூர்: வாணியம்பாடியில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் கல்லாறினை புனரமைக்கும் பணியினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.

கல்லாறினை புணரமைக்கும் பணி தொடக்கம்
கல்லாறினை புணரமைக்கும் பணி தொடக்கம்

By

Published : Dec 12, 2020, 4:51 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, பாலாறானது இரண்டு கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு கிளை ராமையந்தோபில் உள்ள கல்லாற்றுடன் கலந்து, 4 கிலோ மீட்டர் சென்று மீண்டும் பாலாற்றில் கலக்கிறது.

இந்நிலையில் இந்த கல்லாற்றில் கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் ஆகியவை கலந்து கல்லாறு மாசு அடையாமல் இருக்கவும், கழிவு நீர் கால்வாய் மூலம் செல்லவும், முதல்கட்டமாக 660 மீட்டர் நீளத்திற்கு ஷாகிராபாத் முதல் ஜனதா மேடு பாலம்வரை, கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்வாய் கட்டப்படுகிறது.

அப்பணி தொடங்குவதற்காக இன்று (டிச.12) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க:சத்தியமங்கலம் உயர்மட்ட பாலத்தை விரைவில் கட்டிமுடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details