திருப்பத்துார் மாவட்டம்வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்தவர் சல்மான். இவரது வீட்டில் வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்துார்: வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை வருவாய்த“துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்படி, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டைச் சோதனையிடச் சென்றனர். இதற்கிடையில் அலுவலர்கள் வரும் தகவலை அறிந்த அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். பின் வீட்டைச் சோதனை செய்த அலுவலர்கள் அங்கிருந்து சுமார் 7 டன் அரிசியை பறிமுதல்செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:வனக்காவலரை எட்டி உதைத்த இளைஞர் கைது!