திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த பிக்கப் ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
பிக்கப் ஆட்டோவில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1 tonne ration rice seized
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பிக்கப் ஆட்டோவில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, தப்பி ஓடிய ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Ration rice seized
அதில் அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகளை கொண்டு செல்வது போல் மேலே முழுவதும் காய்கறி கூடைகளை அடுக்கிவிட்டு வாகனத்தில் 1 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.