திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியிலிருந்து வெளிமாநிலத்திற்கு காரின் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக ஆம்பூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
வெளிமாநிலத்திற்கு கடத்தவிருந்த ஒன்றரை டன் அரிசி பறிமுதல்! - ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வெளி மாநிலத்திற்கு காரின் மூலம் கடத்தவிருந்த 1.50 டன் ரேசன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
ரேசன் அரிசி பறிமுதல்
தகவலின்பேரில் மாராப்பட்டு பகுதிக்கு விரைந்த ஆம்பூர் காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த காரில் சோதனை மேற்கொண்டபோது அந்தக் காரில் 17 மூட்டைகள் கொண்ட 1.5 டன் ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், அரிசியைப் பறிமுதல்செய்து காவல் நிலையம் கொண்டுவந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.