திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சர்க்கரை ஆலை அருகே தமிழ்நாடு வாணிப கழகம் கிடங்கில் 30க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
20% போனஸ் வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்! - திருப்பத்தூரில் தொழிலாளர்கள் போராட்டம்
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், 20 விழுக்காடு போனஸ் வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
godown workers protest
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்பட்டதை போல், தற்போதும் 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய சுமை தூக்கும் தொழிலாளர்கள், இன்று (நவம்பர் 7) ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கரோனா காலத்திலும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக பணியாற்றி வந்ததாகக் கூறினர்.