திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சிகரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்(35). இவர் பச்சகுப்பம் - ஆம்பூர் இடையேயான ரயில் இருப்பு பாதையில் தண்டவாளம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
வழக்கம்போல் நேற்று (டிசம்பர் 28) இவர் பணியிலிருந்தபோது பிலாஸ்பூரிலிருந்து, எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஜோலார்பேட்டை காவல் துறையினர், வினோத் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.