வாணியம்பாடி அடுத்த கோணாம்மேடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கவில்லையென்றும், இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தபோது 10 நிமிடம் மட்டுமே தண்ணீர் விடுவதாகவும், இதே போல் கடந்த நான்கு மாதங்களாக செய்து வருவதால் இதற்கு உடனடியாக தீர்வு காணும்படி பலமுறை கூறியும் அலுவலர்கள் செவி சாய்க்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை ஆம்பூர் - வாணியம்பாடி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் சரிவர குடிநீர் வழங்காத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாச்சியர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இப்பிரச்சனை குறித்து உடனடி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.