தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

People protest: வெள்ள நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காலணி தொழிற்சாலைகள் நில ஆக்கிரமிப்பு செய்து தொழிற்சாலைகள் கட்டியுள்ளதால் வெள்ள நீர் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் வெள்ள நீரை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ள நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Nov 18, 2021, 2:12 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அதனை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் நிறைய காலணி தொழிற்சாலைகள் உள்ளன. இந்தக் காலணி தொழிற்சாலை நிர்வாகம் இப்பகுதியிலுள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து தொழிற்சாலைகளைக் கட்டியுள்ளதால் அப்பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் வெள்ள நீரை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்துசென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'கனமழை சேத அறிக்கைக்குப் பின்னரே மீனவர்களுக்கு இழப்பீடு'

ABOUT THE AUTHOR

...view details