தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயிரை கையில் பிடித்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்’ - சுரங்கப்பாதை நீரை அகற்ற கோரிக்கை - latest tamil news

திருப்பத்தூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தண்டவாளத்தைக் கடக்க வேண்டியுள்ளதால் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரை அகற்ற கோரிக்கை
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரை அகற்ற கோரிக்கை

By

Published : Dec 7, 2022, 10:28 PM IST

திருப்பத்தூர்:மொளகரம்பட்டி பகுதியில், ரயில்வே கேட் செயல்பட்டு வந்தது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் பல்வேறு கிராமங்களுக்கும் அரசு மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் ரேசன் கடை அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் பணிக்காகவும் திருப்பத்தூர் நகர் பகுதிகளுக்கும் செல்லும் முக்கிய வழியாக திகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த கேட்டின் அருகில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 1 வருடத்திற்கு முன்பு ரயில்வே துறையினர் சுரங்க பாலம் அமைத்தனர். இந்நிலையில் இந்த நடை பாதை சுரங்க பாலத்தில், நீர் ஊற்று பெருக்கெடுத்து குளம் போல் காட்சி அளிக்கின்றது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், ”சுரங்க பாலத்தில், நீர் செல்ல வழியில்லாமல் சுமார் 4 அடி உயரம் வரை நீர் தேங்கி உள்ளது. தேங்கி இருக்கும் நீரை ஆயில் இன்ஜின் கொண்டு பெயரளவில் மட்டுமே வெளியேற்றுகின்றனர். இந்த ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கு முன்பு, ரயில்வே கேட் இருந்தபோதே எங்களுக்கு போக்குவரத்திற்கு வசதியாக இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

ஒப்பந்ததாரர் மூலம் தரமற்ற முறையில் தரைப்பாலம் அமைத்துள்ளனர். ஆதலால், பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் பகுதி மற்றும் தரை பகுதிகளில் இருந்து நீர் ஊற்று பெருக்கெடுத்து, பாலத்தில் சுமார் 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் பள்ளிக்குச்செல்லும் மாணவ மாணவியர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் வேறு வழியின்றி தினம் தினம் ரயில் தண்டவாளத்தைக் கடந்து ஆபத்தான முறையில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இல்லை என்றால் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றித் தான் செல்ல வேண்டும்.

நாங்கள் பலமுறை ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் கூறினோம். ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி வருகின்றோம். எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் செல்கின்றனர்.

சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரை அகற்ற கோரிக்கை

ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதைக் கருத்தில் கொண்டு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உயிர் சேதம் அடைவதற்குள் சுரங்கப் பாலத்தில் உள்ள மழை தண்ணீரை அகற்றி வழி வகை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பனிமூட்டத்தால் தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details