திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உஸ்மானியா இண்டஸ்டீரிஸ் என்னும் தனியார் தோல் தொழிற்சாலையில், தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பிச் சுத்திகரிப்பு செய்யாமல், தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளேயே குழி வெட்டி கழிவுநீரைத் தேக்கி வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
மேலும், உஸ்மானியா இண்டஸ்டீரிஸ் எனும் தனியார் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையில், அபாயகரமான பொருட்களைக் கையாளுவதற்கான உரிமம் பெறப்படாமல், அவற்றைப் பயன்படுத்தி வந்ததும் அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதிக்கும் வகையில் தோல் கழிவுநீரைத் தேக்கி வைத்தற்காகவும், அபாயகரமான பொருட்களைப் பயன்படுத்த அனுமதி பெறாதற்காகவும், உஸ்மானியா தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பைத் துண்டித்து, தொழிற்சாலை மூட உத்தரவு பிறப்பிக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
இதையும் படிங்க:Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?