தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கைது! - மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி

திருப்பத்தூர்: மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி 27 லட்சம் ரூபாய் மோசடி செய்த அரசு மருத்துவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி
மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி

By

Published : Jan 9, 2021, 1:51 PM IST

திருப்பத்தூர் அடுத்த வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் ஓமியோபதி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன், அவரது மனைவி புஷ்பவள்ளி ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரதராஜன் மகளுக்கு சென்னையிலுள்ள எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான சீட்டு வாங்கித் தருவதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இதனை நம்பிய வரதராஜன், அவரது மனைவி புஷ்வள்ளி ஆகியோர் அவரிடம் 27 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து பல நாள்களாகியும் மருத்துவ படிப்பிற்கான சீட்டை வாங்கித் தராததால் ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அலட்சியாமக பதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புஷ்பவள்ளி புகார் அளித்தார்.

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி

இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அரசு மருத்துவரான ரவிச்சந்திரன், அவரது மைத்துனர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த ரவிச்சந்திரன் மனைவி வித்யா, வெங்கடேசன் மனைவி ராஜேஸ்வரி, சரவணன் ஆகிய மூவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் கடன் மோசடி: விசாரணையைத் தீவிரப்படுத்துமா சைபர் க்ரைம்?

ABOUT THE AUTHOR

...view details