திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், தனது வீட்டில், வெளிமாநில மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் ஆகியவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
வாணியம்பாடி அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்! - குற்றச் செய்திகள்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை வாணியம்பாடி காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.
வீட்டில் வைத்து சரக்கு சப்ளை செய்த நபருக்கு போலீஸ் வலை!
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளரின் உத்தரவையடுத்து வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான காவல் துறையினர், சீனிவாசனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 750 வெளிமாநில மது பாட்டில்கள், கள்ளச்சாராய பாக்கெட்டுகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், தப்பியோடிய சீனிவசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.