கரூர்:மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கண்ணன் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். அலுவலக நேரத்தில் இவரிடம், கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த சங்குகுமார் (41) என்ற நபர், தன்னை வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார்.
மேலும், அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி அந்த நபர், சார்பதிவாளரிடம் ஒரு கட்டத்தில் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சார்பதிவாளர் கண்ணன் அவரது அடையாள அட்டையை கேட்டு வாங்கி பார்த்த போது, அது போலியானது என தெரியவந்தால், கரூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து ரெய்டு நடத்திய நபர் கைது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கரூர் நகர காவல் நிலைய போலீசார், சங்குகுமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் போலியான வருமானவரித்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சார்பதிவாளர் கொடுத்த புகாரினை பெற்றுக் கொண்ட கரூர் போலீசார், அந்த நபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் கடந்த மாதம் தனியார் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரி என்று கூறிய பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போத அரசு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை எனக் கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரளா: பி.எஃப்.ஐ. தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை: கிடைத்தது முக்கிய க்ளூ!