திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர்ப்பகுதி பிரசித்திப் பெற்ற ஶ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில் தெரு, ஆஞ்சநேயர் கோயில் குடியிருப்புப் பகுதிகளில் குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளன.
குப்பைக் கழிவுகள் மக்கி ஒரு வகையான ரசாயன கழிவுகள் வெளியேறி காற்றில் கலந்து துர்நாற்றம் வீசிவருகின்றது. இந்தக் காற்றை சுவாசிக்கும் குடியிருப்புவாசிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் இந்தக் காற்றை சுவாசிப்பதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனை சிகிச்சைக்குச் சென்றுவரும் அவலம் ஏற்படுகிறது.