வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர், தனது வீட்டில் தங்கியிருந்த உறவினரான 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் வயிறு வீக்கம் அடைவதை கண்ட பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.