தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை - Pudur village near Jolarpet in Tirupattur district

கோடியூர் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Etv Bharatவங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்  கொள்ளை
Etv Bharatவங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை

By

Published : Sep 6, 2022, 12:26 PM IST

Updated : Sep 6, 2022, 2:10 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே புதுார் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் தனது உறவினரின் திருமண செலவிற்காக தனது வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்காக கோடியூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அதனை இருசக்கரவாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

அதனைதொடர்ந்து துணி எடுப்பதற்காக அருகில் உள்ள துணி கடைக்கு சென்றார். அப்போது, துணி கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று மீண்டும் திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டி திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு சோதனை செய்தபோது, அதில் வைத்திருந்த ஒரு லட்சம் மாயமானதை கண்டு அதிர்ச்சிடைந்தார்.

வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை

பின்னர் இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துணிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ பதிவை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

Last Updated : Sep 6, 2022, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details