தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மாத காலமாக பூட்டியிருந்த வீடு.. ஸ்கெட்ச் போட்டு திருடிய நபர்கள் - One lakh rupees cash, two pounds jewelery thrift near thirupattur

திருப்பத்தூர்: ஒரு மாத காலமாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம், இரண்டு பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

திருப்பத்தூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை
திருப்பத்தூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை

By

Published : May 9, 2021, 10:36 PM IST

திருப்பத்தூர் அடுத்த தேங்காய் ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தரவேலு (30), விஜி (25) தம்பதி. இவர்களுக்கு சில மாதங்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த விஜி கடந்த ஒரு மாத காலமாகவே விஷமங்கலத்தில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். கணவர் சுந்தரவேலு ஓசூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு மாத காலமாக வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், உண்டியல் சேமிப்பு பணம் 50 ஆயிரம் ரூபாய், இரண்டு பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (மே 8) இரவு 10 மணி அளவில் ஓசூரில் இருந்து வீடு திரும்பிய சுந்தரவேலு தன்னுடைய வீடு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அவர் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டை சோதனையிட்டு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details