கிருஷ்ணகிரி மாவட்டம், பேச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 40). இவர் நேற்று (செப்.27) திருப்பத்தூர் பகுதியிலுள்ள தனது நண்பரை சந்தித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது செவ்வாத்தூர் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.