தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல் கிராம சபை கூட்டம்! மக்கள் புறக்கணிப்பா? இல்ல தலைவர் அவமதிப்பா? - Tirupattur district panchayat president issue

Nayakaneri panchayat president issue: ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலைகிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்காமலேயே கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 4:38 PM IST


திருப்பத்தூர்:இரண்டு ஆண்டுகளாகநாயக்கனேரி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமலேயே நடந்து வரும் நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்!

ஆம்பூர் அடுத்த மலைப்பகுதியில் உள்ளது நாயக்கனேரி மலை கிராமம். இந்த மலை கிராம ஊராட்சியில் பனங்காட்டேரி மற்றும் காமனூர் தட்டு என்ற மலை கிராமங்கள் உள்ளன. இந்த நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி, தேர்தல் ஆணையத்தின் மூலம் பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி காமனூர் தட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது மனைவி இந்துமதி என்பவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்தார். இந்நிலையில் இந்துமதி வேட்புமனு தாக்கல் செய்ய முற்பட்டபோது நாயக்கனேரி மலைவாழ் மக்கள் இந்துமதியை தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இந்துமதி வேட்புமனு தாக்கலின் கடைசி நாள், கடைசி நேரத்தில் ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி தலைவர் பதிவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்டியலின பெண் தலைவர் பதவிக்கு, இந்துமதி வேட்புமனு தாக்கல் செய்ததால் மலைகிராம மக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமலும் ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமலும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: CM MK Stalin : தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே திராவிட மாடலின் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

இதனால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மலைகிராம மக்கள் இந்துமதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் மலைகிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் இடைத்தேர்தல் நடைப்பெற்ற போதும் 1 முதல் 7 வார்டுகளில் யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், 8 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு நதியா என்பவரும், 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுசிலா என்பவரும், நாயக்கனேரி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இந்துமதி என்பவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாயக்கனேரி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம், தலைவர் இல்லாமல் ஊராட்சி செயலாளர் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாயக்கனேரி மலைக்கிராமத்தில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்பாபு தலைமையிலேயே நடைபெற்றது. இதிலும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டியன் கலந்து கொள்ளாமலே கூட்டம் நடைப்பெற்றது.

இதையும் படிங்க: "இஸ்ரோ தமிழக விஞ்ஞானிகள் பெயரில் உதவித் தொகை" முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details