திருப்பத்தூர் அடுத்த நார்சாம்பட்டு பகுதியில் அமைந்துள்ளது பூங்காவனத்தம்மன் கோயில். ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசை தினத்தன்று இக்கோயிலின் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 18 கிராமங்கள் ஒன்றுசேர்ந்து நடத்தி வருகின்றனர்.
பூங்காவனத்தம்மன் சிலையை பதினெட்டு ஊர் கிராமங்களுக்குத் தோளில் வைத்து சுமந்து சென்று, வீதி உலா வருவது வழக்கம். அப்போது சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் நடனமாடி வருவர். பின்னர் பதினெட்டு கிராமங்களுக்கு வீதி உலா சென்ற அம்மன் சிலையை கருவறையில் வைத்துப் பூஜை செய்வர்.