தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி - ஜோலார்பேட்டையில் தாய், மகன் தற்கொலை - ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை

மகனுக்கு பெண் குழந்தை பிறந்ததால் தாய், மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 9, 2022, 9:34 AM IST

Updated : Oct 9, 2022, 9:56 AM IST

திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச்சேர்ந்த சேகர் மனைவி சிவகாமி(55). இவருக்கு சந்தோஷ், சுதாகர், முரளி ஆகிய மூன்று மகன்கள் இருந்த நிலையில், சந்தோஷ், சுதாகர் ஆகியோர் தற்கொலை செய்து உயிரிழந்தனர். இந்நிலையில், மூன்றாவது மகன் முரளி(27) ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இந்துஜா(20) என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், நேற்று முன்தினம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவ்விருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் முரளி மற்றும் முரளியின் தாயாரான சிவகாமி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச்சென்று பெண் குழந்தையைப் பார்த்துவிட்டு, வீடு திரும்பினர். இந்நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் ஏனோ, மனமுடைந்த இருவரும் நேற்று (அக்.8) வீட்டில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், அங்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார், அவ்விருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, உயிரிழந்த முரளியின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல...

இதையும் படிங்க: நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 14 பேர் பலி

Last Updated : Oct 9, 2022, 9:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details